என் மலர்tooltip icon

    இந்தியா

    LIVE

    பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் NDA கூட்டணி முன்னிலை... லைவ் அப்டேட்ஸ்

    • மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
    • வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பீகார் சட்டசபைக்கு கடந்த 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும்.

    வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 'விவிபாட்' எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் 'சீல்' வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நிறைந்த பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு அறைகளுக்கு இரட்டை பூட்டுப்போடப்பட்டது.

    இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது தொடங்கியது. மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதெல்லாம் நம்ப முடியாதது, மகா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று அக்கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

    எனவே, பீகாரில், தொடர்ந்து 5-வது தடவையாக நிதிஷ்குமார் ஆட்சியை பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்று இன்று தெரிந்துவிடும்.

    Live Updates

    • 14 Nov 2025 9:00 AM IST

      மஹுவா தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவு

    • 14 Nov 2025 8:59 AM IST

      பீகார் சட்டசபை தேர்தலில் தபால் வாக்குகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை 

    • 14 Nov 2025 8:58 AM IST

      பீகார் தேர்தல் முடிவுகள்: அலிநகர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் மைதிலி தாக்கூர் முன்னிலை

    • 14 Nov 2025 8:38 AM IST

      பீகார் தேர்தல் முடிவுகள்: மகாகத்பந்தன் கூட்டணி முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் முன்னிலை

    • 14 Nov 2025 8:20 AM IST

      பீகார் தேர்தல் முடிவுகள்: தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், என்டிஏ 36 இடங்களிலும், இந்தியா கூட்டணி 22 இடங்களிலும் முன்னிலை.

    • 14 Nov 2025 8:10 AM IST

      243 சட்டசபை தொகுதிகளை கொண்ட பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை.

    • 14 Nov 2025 8:06 AM IST

      பீகார் தேர்தல் முடிவுகள்: பாட்னாவில் பா.ஜ.க. தொண்டர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

    • 14 Nov 2025 8:03 AM IST

      பீகாரில் ஆண்களை விட பெண்களின் வாக்கு அதிக அளவில் பதிவாகி உள்ளது. 

    • 14 Nov 2025 8:01 AM IST

      பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

    Next Story
    ×