என் மலர்tooltip icon

    இந்தியா

    LIVE

    பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் NDA கூட்டணி முன்னிலை... லைவ் அப்டேட்ஸ்

    • மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
    • வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பீகார் சட்டசபைக்கு கடந்த 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும்.

    வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 'விவிபாட்' எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் 'சீல்' வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நிறைந்த பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு அறைகளுக்கு இரட்டை பூட்டுப்போடப்பட்டது.

    இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது தொடங்கியது. மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதெல்லாம் நம்ப முடியாதது, மகா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று அக்கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

    எனவே, பீகாரில், தொடர்ந்து 5-வது தடவையாக நிதிஷ்குமார் ஆட்சியை பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்று இன்று தெரிந்துவிடும்.

    Live Updates

    • 14 Nov 2025 11:31 AM IST

      பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. SIR மூலம் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கும் 65 லட்சம் பேரை நீக்கியபின் என்ன முடிவை எதிர்பார்க்க முடியும்? ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே வெற்றியாளரை அறிவித்துவிட்டால் ஜனநாயகம் எப்படி பிழைக்கும்?- காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா குற்றச்சாட்டு

    • 14 Nov 2025 11:25 AM IST

      பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 190 இடங்களில் முன்னிலை. மகாகத்பந்தன் கூட்டணி வேட்பாளர்கள் 49 இடங்களில் முன்னிலை.

    • 14 Nov 2025 11:23 AM IST

      பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட ஆர்.ஜெ.டி. கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பின்னடைவு. 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. வேட்பாளர் சதீஷ்குமார் 1,273 வாக்குகளில் முன்னிலை

    • 14 Nov 2025 10:57 AM IST

      பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: குடும்பா தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராஜேஸ்குமார் பின்னடைவு

    • 14 Nov 2025 10:56 AM IST

      பீகார் சட்டசபை தேர்தல்: பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. 

    • 14 Nov 2025 10:23 AM IST

      பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி உறுதியாகி உள்ள நிலையில், டெல்லியில் கொண்டாட்டங்கள் வேண்டாம் என பா.ஜ.க. வேண்டுகோள் விடுத்துள்ளது. டெல்லி கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பா.ஜ.க. தலைமை தெரிவித்துள்ளது. 

    • 14 Nov 2025 10:16 AM IST

      பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: தேர்தல் ஆணையத் தரவின்படி 127 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை. மகாகத்பந்தன் கூட்டணி 44 இடங்களில் முன்னிலை

    • 14 Nov 2025 10:03 AM IST

      பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்கள் 159 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 80 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

    • 14 Nov 2025 9:10 AM IST

      பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் NDA கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 243 இடங்களில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் NDA கூட்டணி 130-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

    Next Story
    ×