என் மலர்tooltip icon

    இந்தியா

    தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 13-ந்தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு #TNAssemblyElection
    X

    தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 13-ந்தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு #TNAssemblyElection

    • தேர்தல் கமிஷனர் குழு முதல் முதலாக அசாமில் ஆய்வை மேற்கொண்டது.
    • 5 மாநிலங்களிலும் நடத்தப்பட்ட ஆய்வை மறு ஆய்வு செய்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வார்.

    தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் மே மற்றும் ஜூன் மாதத்தில் முடிவடைகிறது.

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் சட்டசபை மே 7-ந் தேதியும், தமிழக சட்டசபை மே 10-ந்தேதியும். அசாம் மாநில சட்டசபை மே 20-ந் தேதியும், கேரள சட்டசபை மே 23-ந்தேதியும் நிறைவு பெறுகிறது. புதுச்சேரி சட்டசபையில் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ந் தேதி முடிவடைகிறது.

    இதனால் இந்த 5 மாநிலங்களுக்கும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தலை நடத்தி முடித்திட தேர்தல் கமிஷன் முனைப்போடு பணியாற்றி வருகிறது.

    மாநில பொதுத்தேர்தல்களை முன்னிட்டு இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தனது குழுவினரோடு சென்று அந்தந்த மாநிலங்களில் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை, தேர்தல் நடத்துவதற்கு தகுந்த நாட்களை ஆய்வு செய்வது வழக்கம்.

    அங்கு தேர்தல் நடத்தும் சமயத்தில் உள்ளூர் விடுமுறைகள், பாரம்பரிய கலாசார விழாக்கள் ஏதேனும் இருக்கிறதா?, தேர்வுகள் ஏதேனும் பாதிக்கப்படுமா? என்பதை எல்லாம் அவர்கள் ஆய்வு செய்வார்கள்.

    இதன்படி மேற்கண்ட 5 மாநில தேர்தல் தேர்தலை முன்னிட்டு தேர்தல் கமிஷனர் குழு முதல் முதலாக அசாமில் ஆய்வை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆய்வு நடத்தியது.

    உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி... தனித்து விடப்பட்ட தவெக - என்ன செய்யப்போகிறார் விஜய்?

    இந்தநிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் கேரளாவிலும், 9 மற்றும் 10-ந் தேதிகளில் மேற்கு வங்காளத்திலும் ஆய்வை நடத்துகிறது.

    இந்த ஆய்வுகளில் தேர்தல் கமிஷன் குழுவினரோடு பதிவு பெற்ற அரசியல் கட்சிகள், அமலாக்க நிறுவனத் தலைவர்கள், போலீஸ் உயரதிகாரிகள், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியான போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.

    இவர்களுடனான கலந்தாலோசனைக்குப் பிறகு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் டெல்லி சென்று, 5 மாநிலங்களிலும் நடத்தப்பட்ட ஆய்வை மறு ஆய்வு செய்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வார்.

    இதனால் தேர்தல் தேதி அறிவிப்பு 10-ந்தேதிக்கு பிறகு எந்த நேரத்திலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வருகிற 13-ந் தேதி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    Next Story
    ×