என் மலர்tooltip icon

    இந்தியா

    உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல்: இங்கிலாந்து, அமெரிக்காவை முந்தியது இந்தியா
    X

    உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல்: இங்கிலாந்து, அமெரிக்காவை முந்தியது இந்தியா

    • ஐரோப்பிய நாடான அன்டோரா மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முதலிடம் பிடித்துள்ளது.
    • இந்தப் பட்டியலின்படி தெற்காசிய நாடுகளில் சீனா 15-வது இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    நம்பியோ தரவுத் தளம் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிடுகிறது. குற்ற விகிதம், பொது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டு நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி 2025-ம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நாடாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஐரோப்பிய நாடான அன்டோரா உள்ளது.

    2-வது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகமும், 3-வது இடத்தில் கத்தார் நாடுகளும் உள்ளன.

    மொத்தமுள்ள 147 நாடுகளில் இந்தியா 55.7 புள்ளிகளுடன் 66-வது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்து 51.7 புள்ளிகளுடன் 87-வது இடமும் அமெரிக்கா 50.8 புள்ளிகளுடன் 89-வது இடமும் பிடித்துள்ளன. தெற்காசிய நாடுகளில் சீனா 76.0 புள்ளிகளுடன் 15-வது இடத்தில் உள்ளது.

    நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி அன்டோரா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், தைவான், ஓமன் ஆகிய நாடுகள் முதல் 5 இடம் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலின் கடைசி இடத்தில் வெனிசுலா இடம்பிடித்துள்ளது.

    Next Story
    ×