என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு இல்லை - மக்களவையில் மத்திய அரசு உறுதி | LPG, Crude oil
    X

    இந்தியாவில் எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு இல்லை - மக்களவையில் மத்திய அரசு உறுதி | LPG, Crude oil

    • சமையல் எரிவாயு உற்பத்தியை 28% அதிகரித்துள்ளோம்.
    • 40 நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வருகிறது.

    ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் உலக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் எரிவாயு ஏற்றுமதிக்கு பிரதான பாதையாக இருந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் கப்பல்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கின்றன.

    இதற்கிடையே எரிபொருள் தடுக்குப்பட்டால் இந்தியாவில் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகத்தை நிறுத்துவதாக மத்திய அரசு கடந்த மார்ச் 8 அன்று அறிவித்தது.

    வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகமே முக்கியம் என்பதால் இந்த முடிவை மத்திய அரசு எடுத்தது.

    இதனால் சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டது.

    மேலும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. 25 நாட்களுக்கு பின்னரே அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே நிலவியது. ஆனால் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பது வதந்தி என மத்திய அரசு மறுத்தது.

    இந்த சூழலில் இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டம் நடந்தது. இதன்போது மக்களவையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி பேசினார்.

    அவர் கூறியதாவது, "மாற்று விநியோகப் பாதைகள் வழியாகத் தினமும் பெரிய அளவிலான திரவ இயற்கை எரிவாயு சரக்குகளை இந்தியா இறக்குமதி செய்கிறது.

    நீண்ட காலப் போர் ஏற்பட்டாலும், இந்தியாவின் எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகக் கட்டமைப்புகள் இந்த நிலையைத் தக்கவைக்கப் போதுமானதாக உள்ளன.

    அமெரிக்கா, நார்வே, கனடா, அல்ஜீரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து எரிவாயுவைப் பெறுவதன் மூலம் கொள்முதல் ஆதாரங்களை நாங்கள் விரிவுபடுத்தியுள்ளோம்.

    இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களின் முழுத் திறனையும் பயன்படுத்தி இயங்கி வருகின்றன. பல இடங்களில் அவை 100% திறனுக்கும் அதிகமாகச் செயல்படுகின்றன.

    கடந்த ஐந்து நாட்களில் மட்டும், சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவுகள் மூலம் சமையல் எரிவாயு உற்பத்தியை 28% அதிகரித்துள்ளோம்.

    நாட்டில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், ஏவியேஷன் டர்பைன் ஃபியூயல் அல்லது எரிபொருள் எண்ணெய் ஆகியவற்றிற்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை.

    ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அல்லாமல், மாற்றுப் பாதைகள் மூலம் பெறப்படும் கச்சா எண்ணெய் இறக்குமதியை 55%-லிருந்து சுமார் 70%-ஆக உயர்த்தியுள்ளோம்.

    2006 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் 27 நாடுகளிலிருந்து மட்டுமே கச்சா எண்ணெயைப் பெற்று வந்த இந்தியா, தற்போது 40 நாடுகளிலிருந்து அதனைப் பெறுகிறது.

    நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் போதிய கையிருப்பு உள்ளது மற்றும் விநியோகச் சங்கிலி இயல்பாகச் செயல்படுகிறது.

    இந்தியாவிலுள்ள 33 கோடி குடும்பங்களின் சமையலறைகள், குறிப்பாக ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வீடுகள், எவ்விதத் தட்டுப்பாட்டையும் சந்திக்கக் கூடாது என்பதே மோடி அரசின் முதன்மையான முன்னுரிமை ஆகும்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×