என் மலர்tooltip icon

    இந்தியா

    பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் தாக்கல்.. உறுதிப்படுத்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
    X

    பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் தாக்கல்.. உறுதிப்படுத்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

    • பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கும்.
    • நாட்டின் பொருளாதார நிலை குறித்த பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.

    2017-ம் ஆண்டில் இருந்து மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 1 விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்று குழப்பம் ஏற்பட்டது.

    இந்நிலையில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வழக்கம் போல் பிப்ரவரி 1-ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

    பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 மணியளவில் மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.

    பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கும். முதல் நாளில் குடியரசுத் தலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார்.

    பட்ஜெட்டிற்கு முந்தைய நாள், அதாவது ஜனவரி 31-ஆம் தேதி, நாட்டின் பொருளாதார நிலை குறித்த பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.

    பட்ஜெட் கூட்டத்தொடர் மிக முக்கியமானது என்பதால், அவையின் நடவடிக்கைகளைச் சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஓம் பிர்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×