என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மோடிக்கு ஜோ பைடனை போல் 'மெமரி லாஸ்..' ராகுல் பேச்சுக்கு அமெரிக்காவிடம் மத்திய அரசு வருத்தம்
- மோடி சொன்னதையே மீண்டும் மீண்டும் மோடி கூறி வருகிறார்.
- உக்ரைன் அதிபர் அமெரிக்கா வந்தபோது, அவரை ரஷிய அதிபர் புதின் என அறிமுகப்படுத்தினார்
மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியையும் [74 வயது] அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் [81 வயது] தொடர்புப்படுத்தி ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமெரிக்க அரசிடம் வருத்தம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி பேசிய ராகுல் காந்தி, தனது சமீப கால பேச்சுக்களில் மோடி சொன்னதையே மீண்டும் மீண்டும் மோடி கூறி வருகிறார். எனக்குத் தெரியவில்லை, ஒரு வேலை அவருக்கு ஞாபக மறதி வந்திருக்கலாம்.
அமெரிக்க அதிபருக்குப் பின்னால் இருந்து ஒருவர் நினைவு படுத்திக்கொண்டே இருக்க வேண்டும், உக்ரைன் அதிபர் அமெரிக்கா வந்தபோது, அவரை ரஷிய அதிபர் புதின் என அமெரிக்க அதிபர் [ஜோ பைடன்] அறிமுகப்படுத்தினார். அவர் தனது ஞாபகத்தை இழந்துவிட்டார். அதே போல நமது பிரதமரும் ஞாபகத்தை இழந்து வருகிறார் என்று ராகுல் விமர்சித்தார்.
இந்நிலையில் இந்த கருத்துக்கு தற்போது மத்திய அரசு அமெரிக்காவிடம் வருத்தம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து பேசியதாவது,
நீண்ட கால ஒற்றுமை, விடாமுயற்சி, பரஸ்பர மரியாதை மற்றும் இரு தரப்பு அர்ப்பணிப்பு ஆகியவை மூலம் கட்டமைக்கப்பட்ட பண்முக கூட்டாண்மையை அமெரிக்காவுடன் இந்தியா பகிர்ந்து கொள்கிறது.
இந்த சூழலில் இதுபோன்ற பேச்சுகள் அல்லது அறிக்கைகள் வருவது துரதிருஷ்டவசமானது. இது இருநாடுகளுக்கு இடையிலான அன்பு மற்றும் நட்புறவுடன் ஒத்துப்போகவில்லை. இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இது பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.