என் மலர்tooltip icon

    இந்தியா

    பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் அழிப்பு - இந்திய ராணுவம் தகவல்
    X

    பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் அழிப்பு - இந்திய ராணுவம் தகவல்

    • டெல்லியை நோக்கி வந்த பாகிஸ்தானின் FATAH 1 நெடுந்தூர ஏவுகணையை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது.
    • பாகிஸ்தானின் சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளத்தை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' பாகிஸ்தானை ஸ்தம்பிக்க வைத்தது.

    இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது. இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

    காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா முறியடித்தது. மேலும் பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திப்புரா, ஜம்மு உள்பட இந்தியாவின் 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குலை வானிலேயே இந்தியா அழித்தது.

    தொடர்ந்து குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் எல்லைப்பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியை நோக்கி வந்த பாகிஸ்தானின் FATAH 1 நெடுந்தூர ஏவுகணையை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது.

    இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் ஏவிய ஏவுகணையை இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானில் இடைமறித்து அழித்தது.

    பாகிஸ்தானின் சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளத்தை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. சியால்கோட் மாவட்டத்தில் உள்ள லூனி, அக்னூர் பகுதிக்கு எதிரே உள்ள பயங்கரவாத ஏவுதளம், எல்லைப் பாதுகாப்புப் படையினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

    Next Story
    ×