என் மலர்
இந்தியா

மகாராஷ்டிராவில் ஓடும் ரெயிலில் பயங்கர தீ விபத்து
- அகமத்நகர் மற்றும் நாராயண்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் தீ பிடித்தது.
- ரெயிலின் 5 பெட்டிகள் தீயில் எரிந்து சேதம்.
மகாராஷ்டிரா மாநிலம் வாலுஞ்ச் அருகே ஓடும் ரெயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நியூ அஸ்தி பகுதியில் இருந்து அகமத் நகர் சென்ற சிறப்பு ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
அகமத்நகர் மற்றும் நாராயண்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் தீ பிடித்தது.
இதனால், ரெயிலின் 5 பெட்டிகள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story






