என் மலர்tooltip icon

    இந்தியா

    அசாமில் பதற்றம்: கண்டதும் சுடும் உத்தரவு பிறப்பித்த முதல்வர் ஹிமந்தா சர்மா!
    X

    அசாமில் பதற்றம்: கண்டதும் சுடும் உத்தரவு பிறப்பித்த முதல்வர் ஹிமந்தா சர்மா!

    • மத ரீதியிலான தூண்டுதல்கள் அதிகரித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • மாட்டு இறைச்சி கடத்தல் மற்றும் வங்கதேச சக்திகளின் தூண்டுதல்களே இந்தப் பதட்டங்களுக்குக் காரணம்

    அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, துப்ரி மாவட்டத்தில் சமீபத்திய மதரீதியான பதற்றங்களை தொடர்ந்து, இரவில், கண்டதும் சுடும் (shoot-at-sight) உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

    அசாம் - வங்கதேச எல்லையை ஒட்டிய துப்ரியில் பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு, ஹனுமான் கோவில் அருகே மாட்டுத் தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மற்றும் கல் வீச்சு போன்ற மத ரீதியிலான தூண்டுதல்கள் அதிகரித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பிஸ்வா, "இரவில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், மாலை 6 மணிக்குப்பிறகு கண்டதும் சுடப்படுவார்கள்.

    சட்டம்-ஒழுங்கை மீட்டெடுக்க விரைவு அதிரடிப் படை (RAF) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) நிலைநிறுத்தப்படுகின்றன.

    குற்றவாளிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்படும். மாட்டு இறைச்சி கடத்தல் மற்றும் வங்கதேச சக்திகளின் தூண்டுதல்களே இந்தப் பதட்டங்களுக்குக் காரணம்" என்று தெரிவித்தார்.

    பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    Next Story
    ×