என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடியை பிக்பாக்கெட் என அழைத்த தேஜஸ்வி யாதவ்: என்.டி.ஏ. தலைவர்கள் கண்டனம்
    X

    பிரதமர் மோடியை பிக்பாக்கெட் என அழைத்த தேஜஸ்வி யாதவ்: என்.டி.ஏ. தலைவர்கள் கண்டனம்

    • பொதுமக்கள் வலுக்கட்டாயமாக பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
    • என்.டி.ஏ. கட்சிகள் அரசு இயந்திரத்தையும், பொது நிதியையும் பேரணி கூட்டத்திற்காக தவறாக பயன்படுத்தியுள்ளது.

    இந்திய பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் சென்று பல்வேறு திட்டங்களை திறந்து வைத்தார். சிவானில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

    இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவிடம் பிரதமர் மோடியின் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தேஜ்ஸ்வி யாதவ் பதில் அளித்து கூறியதாவது:-

    நாங்கள் பிக்பாக்கெட் பிரதமரை விரும்பவில்லை. பீகார் மாநில நிர்வாகம் கூட்டத்தை கூட்டுவதற்கான குவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வலுக்கட்டாயமாக பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அரசு இயந்திரத்தையும், பொது நிதியையும் பேரணி கூட்டத்திற்காக தவறாக பயன்படுத்தியுள்ளது.

    இது ஒரு பிக்பாக்கெட் ஆகும். எங்களுக்கு பிக்பாக்கெட் பிரதமரும் வேண்டாம். சுயபுத்தி இல்லாத முதல்வரும் வேண்டாம்.

    இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பீகார் துணை முதல்வர் சம்ராத் சவுத்ரி "தேஜஸ்வி யாதவின் இந்த கருத்து, அவருடைய தரத்தை காட்டுகிறது.

    இந்தி படத்தில் அமிதாப் பச்சன் கையில் என் அப்பா ஒரு திருடன் என்று எழுதியிருந்ததுபோல, தேஜஸ்விக்கும் நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.

    ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நீரஜ் குமார் "தேஜஸ்வி தண்டனை பெற்ற நபரின் மகன்" எனத் தெரிவித்தார்.

    Next Story
    ×