search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமித் ஷா உடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு: பா.ஜனதாவுடன் கூட்டணியா?
    X

    அமித் ஷா உடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு: பா.ஜனதாவுடன் கூட்டணியா?

    • பா.ஜனதா கூட்டணியில் ஏற்கனவே தெலுங்கு தேசம் அங்கம் வகித்துள்ளது
    • தெலுங்கானா சட்டசபை தேர்தலை இணைந்து சந்திக்க வாய்ப்பு இருக்கலாம் எனத் தகவல்

    ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷாவை சந்தித்துள்ளார். மேலும், பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டாவையும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடந்துள்ளது.

    இந்த சந்திப்பால் தெலுங்கு தேசம் கட்சி பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் எனத் தெரிகிறது. இந்த வருடம் இறுதியில் தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்பின் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    2014 தேர்தலின்போது என்.டி.ஏ. கூட்டணியில் தெலுங்குதேசம் கட்சி ஒரு பகுதியாக இருந்தது. 2019-ம் தேர்தலுக்கு முன் 2018-ல் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இருந்தாலும், போர்ட் பிளேயர் நகராட்சி தேர்தலின்போது இரண்டு கட்சிகளும் இணைந்து களம் இறங்கின.

    கடந்த மாதம் நடைபெற்ற மன் கி பாத் நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும், முன்னாள் முதல்வருடம் ஆன என்.டி. ராமராவ் குறித்து நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சி 88 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×