search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வரி வருவாய் பகிர்வு - தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் தொகை எவ்வளவு?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வரி வருவாய் பகிர்வு - தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் தொகை எவ்வளவு?

    • கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்கள் சார்பில் போராட்டம் நடந்துள்ளன.
    • தி.மு.க. எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில்.

    மத்திய அரசின் ஜி.எஸ்டி. வசூலில் மாநிலங்களுக்கு வழங்கும் வருவாய் பகிர்வில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்தநிலையில், மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டங்கள் வெடித்துள்ளன. கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்கள் சார்பில் போராட்டம் நடந்துள்ளன.

    கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகள் (இறக்குமதி வரி மீதான ஜிஎஸ்டியைத் தவிர்த்து)- ரூ.22,26,983.39 கோடி., அதே காலக்கட்டத்தில் உத்திரப் பிரதேசத்தில் வசூலிக்கப்பட்ட வரி - ரூ.3,41,817.60 கோடி.

    கடந்த 5 ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கிய வரிப் பகிர்வுத் தொகை - ரூ.6,42,295.05 கோடி. கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்துக்கு மட்டும் விடுவிக்கப்பட்ட வரிப் பகிர்வுத் தொகை - சுமார் ரூ.6,91,375.12 லட்சம் கோடி.

    இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது தி.மு.க. எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு புள்ளி விவரங்களுடன் பதில் அளித்து உள்ளது.

    அதில் மாநிலங்கள் கொடுத்த ஒவ்வொரு ரூபாய்க்கும் மத்திய அரசு திருப்பி அனுப்பிய தொகை வருமாறு:-

    தமிழ்நாடு - 26 பைசா

    கர்நாடகா - 16 பைசா

    தெலுங்கானா - 40 பைசா

    கேரளா - 62 பைசா

    மத்தியபிரதேசம் - ரூ.1.70

    உத்தரப்பிரதேசம் -ரூ. 2.2

    ராஜஸ்தான் - ரூ.1.14

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×