என் மலர்tooltip icon

    இந்தியா

    கல்லூரி விடுதியில் தகராறு- சக மாணவரை அயன் பாக்ஸில் சூடு வைத்து தாக்கிய 4 பேர் கைது
    X

    கல்லூரி விடுதியில் தகராறு- சக மாணவரை அயன் பாக்ஸில் சூடு வைத்து தாக்கிய 4 பேர் கைது

    • மாணவர் மீது தாக்குதல் நடத்த அயர்ன் பாக்ஸ், கம்பு, பிவிசி குழாய்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
    • தனியார் விடுதியில் மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள், விடுதி அறைக்குள் இருந்த மற்றொரு மாணவரை இரக்கமின்றி தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அந்த வீடியோவில், மாணவர் ஒருவர் கெஞ்சுவதையும், மன்னிப்பு கேட்பதையும், மாணவரை தொடர்ந்து தாக்குவதையும் காட்டுகிறது. அந்த மாணவரின் சட்டை கிழித்து, சட்டையை கழற்றவும் வற்புறுத்துவது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது.

    பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் எஸ்ஆர்கேஆர் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் அங்கித், உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மார்பு மற்றும் கைகளில் பலத்த காயங்களும் உள்ளன.

    அங்கித் மீது தாக்குதல் நடத்த அயன் பாக்ஸ், கம்பு, பிவிசி குழாய்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. தாக்குதலுக்கான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

    மேலும் தனியார் விடுதியில் மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×