என் மலர்
இந்தியா

விபத்தில் காயம் அடைந்த மூதாட்டியை தூக்கி சென்று காப்பாற்றிய போலீஸ்காரர்- இணையத்தில் பாராட்டுகள் குவிகிறது
- சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது எதிர்பாராதவிதமாக ஒரு இருசக்கர வாகனம் மோதியுள்ளது.
- ஆம்புலன்சுக்கு போன் செய்த நிலையில் அது வர தாமதமாகி உள்ளது.
மும்பையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை ஒன்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 62 வயதான மூதாட்டி ஒருவர் நடந்து சென்றுள்ளார். அவரது கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை பார்ப்பதற்காக அந்த மூதாட்டி சென்றுள்ளார்.
அப்போது சாலையை கடக்க முயன்ற அந்த மூதாட்டி மீது எதிர்பாராதவிதமாக ஒரு இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டு மூதாட்டி படுகாயம் அடைந்துள்ளார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் வக்சவுரே மற்றும் காவலர்கள் விரைந்து சென்றுள்ளனர். அவர்கள் ஆம்புலன்சுக்கு போன் செய்த நிலையில் அது வர தாமதமாகி உள்ளது. இதனால் ஆம்புலன்சுக்காக காத்திருக்காமல் போலீஸ்காரர் வக்சவுரே, படுகாயம் அடைந்த மூதாட்டியை தூக்கி சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்து அந்த மூதாட்டியின் உயிரை காப்பாற்றி உள்ளார்.
அவர் மூதாட்டியை தூக்கி சென்ற புகைப்படம் டுவிட்டரில் வைரலாக பரவியது. இதை பார்த்த பயனர்கள் பலரும் போலீஸ்காரர் வக்சவுரேவுக்கு பாராட்டு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.






