என் மலர்
இந்தியா

மிசோரமில் ராகுல் காந்தி பாதயாத்திரை
- ஜஸ்வால் சென்ற ராகுல் காந்தியை ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றனர்.
- பேரணிக்கு பிறகு கவர்னர் மாளிகை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார்.
ஜஸ்வால்:
5 மாநில சட்டசபை தேர்தல்களில் மிசோரமும் ஒன்றாகும். 40 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்துக்கு நவம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று மிசோரமில் பாத யாத்திரை மேற்கொண்டார். ஜஸ்வால் சென்ற அவருக்கு ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றனர். அங்குள்ள சன்மாரி சந்திப்பில் இருந்து அவர் பாத யாத்திரையை தொடங்கினார். சாலையின் இருபுறமும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கவர்னர் மாளிகை வரை 4 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் வரை ராகுல்காந்தி நடந்து செல்கிறார். பேரணிக்கு பிறகு கவர்னர் மாளிகை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
Next Story






