search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிவகுமார் வாக்காளர்களுக்கு குக்கர் விநியோகம் செய்கிறார்- குமாரசாமி குற்றச்சாட்டு
    X

    சிவகுமார் வாக்காளர்களுக்கு குக்கர் விநியோகம் செய்கிறார்- குமாரசாமி குற்றச்சாட்டு

    • பெங்களூர் ஊரக மக்களவை தொகுதியில் மிகப்பெரிய அளவில் தேர்தல் முறைகேடுகள் நடைபெறுகின்றன.
    • தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகும் குக்கர் விநியோகம் தொடர்கிறது.

    பெங்களூர்:

    கர்நாடக ஜனதா தளம் (எஸ்) தலைவரும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மருமகன் டாக்டர் சி.என். மஞ்சுநாத் பா.ஜ.க. சின்னத்தில் பெங்களூர் ஊரக மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கர்நாடக மாநில காங்கிரஸ் துணை முதல்-மந்திரி சிவகுமார் மற்றும் அவரது சகோதர் டி.கே.சுரேஷ் ஆகியோர் அதிக அளவில் வாக்காளர்களுக்கு குக்கர் விநியோகம் செய்வதாக ஜனதா தளம் (எஸ்) மாநில தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெங்களூர் ஊரக மக்களவை தொகுதியில் மிகப்பெரிய அளவில் தேர்தல் முறைகேடுகள் நடைபெறுகின்றன. இங்கு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக இருதய நோய் நிபுணர் டாக்டர் சி.என். மஞ்சுநாத் உள்ளார். இந்த தொகுதியில் துணை முதல்-மந்திரி சிவக்குமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் பணபலம், ஆயுத பலம், அதிகார துஷ்பிரயோகம் செய்து தேர்தலில் வெற்றி பெற உள்ளனர். அவர்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வாக்காளர்களுக்கு குக்கர்களை விநியோகம் செய்தனர்.

    தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகும் குக்கர் விநியோகம் தொடர்கிறது. ஹரோஹல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் குக்கர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தேன். விசாரணை நடத்த ராம்நகர் மாவட்ட கலெக்டருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வணிக வரித்துறை அதிகாரிகளையும் அனுப்பினார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை என்று அறிக்கை கொடுத்து மூடிவிட்டனர்.


    குக்கர் தயாரித்து அனுப்புவது இன்னும் தொடர்கிறது. அதற்கான போட்டோக்களை பாருங்கள். புகார் வந்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 48 மணி நேரமாகியும் இங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    சிவக்குமார், சுரேஷ் சகோதரர்களின் தேர்தல் விதிமீறல்களை கட்டுப்படுத்த வேண்டும். திறமையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜே.டி.(எஸ்) தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

    குக்கர், சேலை ஸ்டாக் கண்டுபிடித்து தொண்டர்கள் தீ வைப்பார்கள். சிவக்குமார், சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்வார்களா? என்பதை நான் பார்க்கிறேன். சட்ட விரோதம் தொடர்ந்தால் நான் விரைவில் முழு வீச்சில் களம் இறங்குவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×