search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் பதவியேற்ற 100 மணி நேரத்திற்குள் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி: டி.ஜி.பி.யிடம் புகார்
    X

    தெலுங்கானாவில் பதவியேற்ற 100 மணி நேரத்திற்குள் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி: டி.ஜி.பி.யிடம் புகார்

    • 6 மாதம் அல்லது ஒரு வருடத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என பேசி வருகின்றனர்.
    • சதி செயலில் ஈடுபடும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும்.

    தெலுங்கானாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியது.

    மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதல்- மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாரத ராஷ்டிரிய சமிதி மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சதி செய்து வருவதாக தெலுங்கானா டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தனர்.

    தெலுங்கானா காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்கள் புன்னா கைலாஷ், சாருக் கொண்டா வெங்கடேஷ் சிலுகா மதுசூதன் ரெட்டி ஆகியோர் டி.ஜி.பி.யிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஸ்ரீஹரி, ராஜேஸ்வர ரெட்டி, பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் ஆகியோர் 6 மாதம் அல்லது ஒரு வருடத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என பேசி வருகின்றனர்.

    மேலும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி செய்து வருகின்றனர். தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து 100 மணி நேரம் கூட ஆகாத நிலையில் சதி செயலில் ஈடுபடும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    இதனால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×