search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து- தெலுங்கானா எம்.எல்.ஏ ராஜா சிங் சஸ்பெண்ட்
    X

    நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து- தெலுங்கானா எம்.எல்.ஏ ராஜா சிங் சஸ்பெண்ட்

    • அவரது கருத்துக்களுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து கட்சியால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    • நோட்டீஸ் வந்த நாளிலிருந்து 10 நாட்களுக்குள் ஏன் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்று சிங் காரணம் காட்ட வேண்டும்.

    நபிகள் நாயகம் குறிவைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக தெலுங்கானா எம்எல்ஏ ராஜா சிங்கை பாஜக இன்று இடைநீக்கம் செய்துள்ளது.

    கடுமையான இந்துத்துவா கருத்துக்களுக்கும், இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவிப்பதில் பெயர் பெற்ற ராஜா சிங், தெலுங்கானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரது கருத்துக்களுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து கட்சியால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து கட்சியின் மத்திய ஒழுங்குக் குழுவின் செயலாளரான ஓம் பதக் வெளியிட்ட அறிக்கையில், "பல்வேறு விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணான கருத்துகளை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள். இது பாரதிய ஜனதாவின் அரசியலமைப்பின் விதியை தெளிவாக மீறுவதாகும். மேலும், விசாரணை நிலுவையில் உள்ளதால், நீங்கள் கட்சியிலிருந்தும், உங்கள் பொறுப்புகள் அல்லது பணிகளில் இருந்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும்படி எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், இந்த நோட்டீஸ் வந்த நாளிலிருந்து 10 நாட்களுக்குள் ஏன் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்று சிங் காரணம் காட்ட வேண்டும் என்றும் சிங்கின் விரிவான பதில் செப்டம்பர் 2-ம் தேதி 2022க்குள் தெரிவிக்க வேண்டும்" என்றும் பதக் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×