என் மலர்
இந்தியா

வக்பு விவகாரத்தில் காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் எழுப்பிய கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் முக்கியத்துவம்: கார்கே
- வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் அனைத்து எதிர்ப்புகளை ஒன்றிணைத்தது.
- இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் எங்களுக்கு ஆதரவு அளித்தன.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் பொதுச் செயலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-
* நேசனல் ஹெரால்டு சொத்து முடக்கம், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பெயர் அமலாக்கத்துறையின் குறப்பத்திரிகையில் இடம் பெற்றிருப்பது என அனைத்தும் பழிவாங்கும் செயலாகும்.
* அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்த பிறகு, அமலாக்கத்துறையின் நடவடிக்கை தற்செயலாக நடந்த நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது.
* சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான நடவடிக்கையால் நாங்கள் பயப்படப் போவதில்லை.
* வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் அனைத்து எதிர்ப்புகளை ஒன்றிணைத்தது. இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் எங்களுக்கு ஆதரவு அளித்தன.
* வக்பு சொத்துக்களில் சர்ச்சையை எழுப்ப அரசு, வக்பில் பயனர்கள் விசயத்தை வேண்டுமென்றே கொண்டு வந்தது.
* காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் முக்கியத்தும் அளித்துள்ளது.
இவ்வாறு கார்கே தெரிவித்தார்.
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது நீதிமன்றம் "வக்பு வாரியங்களில் புதிய உறுப்பினர்களை நியமிக்க தடை விதிக்கிறோம். தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.






