search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாது.. பகீர் கிளப்பிய ஆய்வு முடிவுகள்
    X

    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாது.. பகீர் கிளப்பிய ஆய்வு முடிவுகள்

    • பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்.
    • ஓராண்டுக்கு பிறகு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது.

    உலகளவில் பெரும் பாதிப்புகளையும், லட்சக்கணக்கில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கொடூர நோயாக கொரோனா வைரஸ் பாதிப்பு விளங்கியது. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அதற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் ஆய்வாளர்கள் தீவிரம் காட்டினர்.

    அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. கொரோனா பெருந்தொற்றை கடந்துவிட்ட நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு உடல்நிலையில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.

    அந்த வரிசையில், தற்போது கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தடுப்பூசி போட்ட ஓராண்டுக்கு பிறகு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிகிறது.

    கோவாக்சின் போட்டவர்களில் 30 சவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. கோவாக்சின் போட்டவர்களில் பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் குறிப்பிட்ட சிலருக்கு பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இதில் பருவ வயது கொண்ட பெண்கள் மற்றும் அலர்ஜி இருப்போருக்கு இதன் பாதிப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரையிலான காலக்கட்டத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. ஆய்வு முடிவுகளின் படி கிட்டத்தட்ட 50 சதவீதம் பேருக்கு நோய்த்தொற்று மற்றும் சுவாசக்குழாயில் நோய்த்தொற்று ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

    இதே போன்று பதின்ம வயது கொண்டவர்களில் 10.5 சதவீதம் பேருக்கு தோல் சார்ந்த கோளாறுகள், 10.2 சதவீதம் இதர பாதிப்புகள், 4.7 சதவீதம் பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. பெரியவர்களில் 8.9 சதவீதம் பேருக்கு பொதுவான பக்க விளைவுகள், 5.8 சதவீதம் பேருக்கு தசைக்கூட்டு கோளாறுகள், 5.5 சதவீதம் பேருக்கு நரம்பு மண்ட கோளாறுகள் ஏற்படுவது உறுதியாகி உள்ளது.

    Next Story
    ×