என் மலர்tooltip icon

    இந்தியா

    அகமதாபாத்தில் ஜாகுவார் கார் மோதியதில் 9 பேர் பலி.. தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
    X

    அகமதாபாத்தில் ஜாகுவார் கார் மோதியதில் 9 பேர் பலி.. தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

    • ஏற்கனவே விபத்து நடந்த நிலையில், அங்கு திரண்டிருந்த மக்கள் மீது கார் மோதியது.
    • 10 பேர் காயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சாட்டிலைட் பகுதியில் உள்ள இஸ்கான் பாலத்தில் நேற்று நள்ளிரவில் ஒரு சொகுசு காரும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்க தொடங்கினர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக சீறிப்பாய்ந்த வந்த ஜாகுவார் கார், கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் கூடியிருந்த மக்கள் மீது மோதியது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். சுமார் 10 பேர் காயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்வர் பூபேந்திர பட்டேல், தனது இரங்கலையும் வேதனையையும் தெரிவித்தார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

    Next Story
    ×