என் மலர்
இந்தியா

X
அனந்தநாகில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ஸ்ரீநகரில் பற்றி எரியும் வீடுகள்
By
மாலை மலர்2 Nov 2024 3:40 PM IST

- காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் வீடுகள் தீப்பற்றி எரிந்தன.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள கன்யார் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இந்த மோதலில் அப்பகுதியில் இருந்த சில வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஹல்கன்காலி பகுதி அருகே பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பாதுகாப்புப்படை தெரிவித்தது. கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளில் ஒருவர் வெளிநாட்டவர் என்பதும், மற்றொருவர் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
Next Story
×
X