என் மலர்
இந்தியா

SIR: 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!
- மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது.
- அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
பீகாரை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்பார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் அக்டோபர் 27 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் தனித்தனியே வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதனால் 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது.
இதில், தமிழகத்தில் மட்டும், 97 லட்சத்து 37 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
இதில் பெரும்பாலும் இரட்டைப் பதிவுகள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனால் தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






