search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    செம்மறி மற்றும் ஆடுகள் சிங்கத்துடன் போட்டியிட முடியாது: எதிர்க்கட்சிகள் மீது ஏக்நாத் ஷிண்டே விமர்சனம்
    X

    செம்மறி மற்றும் ஆடுகள் சிங்கத்துடன் போட்டியிட முடியாது: எதிர்க்கட்சிகள் மீது ஏக்நாத் ஷிண்டே விமர்சனம்

    • மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன
    • மகாராஷ்டிரா மாநில அரசுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாராளுமன்றத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து போட்டியிட இருக்கிறது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகளை நான் கழுகுகள் என்று அழைக்கமாட்டேன். ஆனால், காட்டில் சிங்கத்திற்கு எதிராக செம்மறி மற்றும் ஆடுகள் ஒன்றிணைந்து சண்டையிட முடியாது. சிங்கம் எப்போதும் சிங்கம்தான். அது காட்டில் ஆளும் மன்னராக திகழும்.

    பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதை மட்டுமே எதிர்க்கட்சிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், எதிர்க்கட்சிகளால் எந்த வகையிலும் போரிட முடியும் என்று நான் பார்க்கவில்லை. அஜித் பவார் எங்களுடன் இணைந்த பிறகு, எம்.எல்.ஏ. ஆதரவு 215 அதிகரிகத்துள்ளது. மாநில அரசுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்தியா பெயர் வைத்ததற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதாவினர், மற்றும் பா.ஜனதா உடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். மத்திய அரசு இந்தியா நாட்டின் பெயரை பாரத் என மாற்ற திட்டமிட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை இடங்கள் உள்ளன. உத்தர பிரதேசத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. உ.பி.க்கு அடுத்தபடியாக மக்களவை தொகுதிகளை அதிக அளவில் கொண்ட பெரிய மாநிலம் மகாராஷ்டிரா ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×