என் மலர்
இந்தியா

பீகார் மக்கள் 4 தீபாவளியை கொண்டாடுகிறார்கள்: அமித் ஷா
- பெண்கள் வங்கி கணக்குகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
- ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.
பீகாரில் நவம்பர் மாதம் 6 மற்றும் நவம்பர் மாதம் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, சரண் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அமித் ஷா பேசியதாவது:-
இந்த வருடம் பீகார் மக்கள் 4 தீபாவளியை கொண்டாடி வருகிறார்கள. ஒன்று பெண்கள் வங்கி கணக்குகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மற்றொன்று ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது. 3ஆவது நவம்பர் 14ஆம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நாள்.
பீகாரில் ஏராளமான கட்டமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. பீகாரில் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு பயணம் செய்ய ஐந்து மணி நேரம் கூட ஆவதில்லை.
இந்த வளர்ச்சி பிரதமர் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரால் இணைந்து செய்யப்பட்டுள்ளது. பீகாரில் எங்கள் அரசு அமைவதற்கு முன் இடம் பெயர்வு, மோசடி, கொலைகள், கடத்தல் பொதுவானதாக இருந்தது.
சிவான் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூரில் கேங்ஸ்டாராக இருந்து அரசியல்வாதியாக மாறிய மறைந்த முகமது ஷகாபுதீன் மகன் ஒசாமா ஷஹாப்பிற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதுபோன்ற வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்தால், பீகாரில் மக்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.






