என் மலர்
இந்தியா

SIR-க்கு எதிராக தி.மு.க. தொடர்ந்த வழக்கு: விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
- தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையிலும் S.I.R. நடவடிக்கை மேற்கொள்வது ஏற்க முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
- கடந்த 4-ந்தேதி தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணியானது தொடங்கியது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. சார்பாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
S.I.R. நடைமுறையில் பல்வேறு குளறுபடிகள் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் சீராய்வு மேற்கொள்வதை ஏற்க முடியாது. பண்டிகை காலத்தில் செய்யப்படும் பணியால் பலர் தங்கள் வாக்குகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பீகார் S.I.R. தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வராத நிலையிலும், தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையிலும் S.I.R. நடவடிக்கை மேற்கொள்வது ஏற்க முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, கடந்த 4-ந்தேதி தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணியானது தொடங்கியது. இதனை தொடர்ந்து, தி.மு.க. தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எப்போது நடைபெறும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், S.I.R. நடைமுறைக்கு எதிராக தி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






