search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனநாயகம் மீது வலுவான நம்பிக்கை இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன: பிரதமர் மோடி உற்சாக பேச்சு
    X

    ஜனநாயகம் மீது வலுவான நம்பிக்கை இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன: பிரதமர் மோடி உற்சாக பேச்சு

    • பாஜக தொண்டர்களின் கடுமையான தேர்தல் பணியை பிரதமர் மோடி பாராட்டினார்.
    • வடகிழக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தொண்டர்கள் மொபைல் போன் டார்ச்சை ஆன் செய்து அசைத்தனர்

    புதுடெல்லி:

    வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் திரிபுராவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றி உள்ளது. நாகாலாந்தில் பாஜக- தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இங்கு யாருக்கும் பெரும்பான்மைக்கு கிடைக்கவில்லை. எனினும் அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள என்பிபி கட்சி ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது.

    இந்த தேர்தல் முடிவுகளால் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். கட்சி தலைமையகத்தில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வெற்றியை கொண்டாடினர். தொண்டர்களிடையே பிரதமர் மோடி பேசுகையில், 'நாட்டில் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது மக்களுக்கு உள்ள வலுவான நம்பிக்கையை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது' என்றார். அப்போது தொண்டர்கள் 'மோடி, மோடி' என முழக்கம் எழுப்பினர்.

    இந்த சிறப்பான வெற்றி பெறுவதற்காக மூன்று வடகிழக்கு மாநிலங்களில் பாஜக தொண்டர்களின் கடுமையான தேர்தல் பணியை பிரதமர் மோடி பாராட்டினார். "வடகிழக்கில் உள்ள எங்கள் கட்சித் தொண்டர்கள் இங்குள்ள அனைவரையும் விட மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்' என்றும் மோடி குறிப்பிட்டார். அப்போது தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    அப்போது வடகிழக்கு மாநில மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தொண்டர்கள் தங்கள் மொபைல் போன் டார்ச்சை ஆன் செய்து அசைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். தொண்டர்கள் டார்ச் ஆன் செய்து அசைக்க, பிரதமர் மோடியும் அவர்களைப் பார்த்து கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    Next Story
    ×