என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி கார்குண்டு வெடிப்பு - அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கம்
    X

    டெல்லி கார்குண்டு வெடிப்பு - அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கம்

    • தற்கொலை படை தாக்குதலை நடத்திய டாக்டர் உமர் அல்பலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி இருந்தார்.
    • சோதனை நடத்திய 2 மாதங்களுக்கு பிறகு அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ந்தேதி நடந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை உயர்கல்வி கற்ற டாக்டர்கள் பலர் குழுவாக சேர்ந்து அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது.

    அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 2 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். தற்கொலை படை தாக்குதலை நடத்திய டாக்டர் உமர் அல்பலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி இருந்தார்.

    இதனால் அந்த பல்கலைக்கழகம் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. அந்த பல்கலைக்கழகம் மீதான நிதி மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். ஆதாரங்களின் அடிப்படையில் அல்பலா பல்கலைக்கழக அறக்கட்டளை தலைவர் சித்திக் கைது செய்யப்பட்டார். அவர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    இந்த நிலையில் அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கப்பட்டுள்ளது. பரிதாபாத்தில் உள்ள அந்த பல்கலைக்கழகத்தின் 54 ஏக்கர் நிலம், கட்டிடங்கள் மற்றும் மருத்துவ கல்லூரி ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதன் மதிப்பு ரூ.140 கோடி ஆகும்.

    சோதனை நடத்திய 2 மாதங்களுக்கு பிறகு அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    சித்திக் மற்றும் அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அல்பலா அறக்கட்டளை ரூ.110 கோடிக்கும் அதிகமான சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

    Next Story
    ×