என் மலர்
இந்தியா

ராம நவமி கொண்டாட்டம்: மசூதி மீது காவிக் கொடியுடன் கபளீகரம் செய்த இந்துத்துவா கும்பல் - வீடியோ
- ராமநாமியை முன்னிட்டு காவிக்கொடிகளுடன் அங்கு பைக் பேரணி நடத்தினர்.
- பின்னணியில் உரத்த இசைக்கு மத்தியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடுவதும் இடம்பெற்றுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ராம நவமியைக் கொண்டாடும் போது, இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர், காவி கொடிகளை ஏந்தியவாறு மசூதியின் மீது ஏறி அட்டகாசம் செய்தனர்.
ராமநாமியை முன்னிட்டு காவிக்கொடிகளுடன் அங்கு பைக் பேரணி சென்ற இந்துத்துவாவினர் அங்குள்ள சையத் சலார் ஹாஜி தர்காவில் கபளீகரம் செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காட்சிகளில், இந்துத்துவாவினர், சையத் சலார் காஜி தர்காவில் ஏறி காவி கொடிகளை அசைப்பதும், பின்னணியில் உரத்த இசைக்கு மத்தியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடுவதும் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக கடந்த மார்ச் 26 அன்று மகாராஷ்டிராவின் ரஹுரி மாவட்டத்தில் இந்துத்துவா கும்பல் ஹஸ்ரத் அகமது சிஷ்டி தர்காவுக்குள் நுழைந்து மேலே ஏறி பச்சைக் கொடியை அகற்றி, காவி கொடியை ஏற்றிய காட்சிகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.






