என் மலர்tooltip icon

    இந்தியா

    பயங்கரவாதிகள் இனி அவர்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க முடியாது - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
    X

    பயங்கரவாதிகள் இனி அவர்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க முடியாது - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

    • பாதாமி கண்டோன்மென்டில் வீசப்பட்ட பாகிஸ்தான் குண்டுகளை ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
    • நேரம் வரும்போது கடினமான முடிவுகளை எடுப்போம் என்பது தான் ஆபரேஷன் சிந்தூர்.

    காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூா்' நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது.

    இதற்டையே, கடந்த சனிக்கிழமை இரவு இரு நாடுகள் டையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எல்லையில் படிப்படியாக அமைதியான சூழ்நிலை திரும்பி வருகிறது.

    இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு-காஷ்மீர் சென்றார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் சென்ற அவர், கவர்னர் மனோஜ் சின்ஹாவுடன் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அவர் ராணுவ வீரர்களுடன் கை குலுக்கினார்.

    பாதாமி கண்டோன்மென்டில் வீசப்பட்ட பாகிஸ்தான் குண்டுகளை ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். அவருடன் ராணுவ தளபதி உபேந்திர திவேதி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.

    இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசியதாவது:-

    ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமை கொள்கிறது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பது பற்றி உலக நாடுகள் யோசிக்க வேண்டும். பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்து இருப்பது குறித்து சர்வதேச அணு ஆயுத முகமை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    நேரம் வரும்போது கடினமான முடிவுகளை எடுப்போம் என்பது தான் ஆபரேஷன் சிந்தூர். பாதுகாத்து கொள்வது மட்டுமல்ல. இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கவும் தெரியும் என ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது. எதிரிகளை நாம் வீழ்த்திய விதத்தை அவர்களால் எப்போதும் மறக்க முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் இது தான் பெரியது. இனி எந்த தாக்குதல் நடவடிக்கையும் போராகதான் கருதப்படும்.

    பயங்கரவாதிகள் இனி அவர்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க முடியாது.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

    Next Story
    ×