என் மலர்
இந்தியா

பீகாரில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி
- எதிர்க்கட்சிகள் அழைப்பின் பேரில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.
- சுட்டுக் கொல்லப்பட்ட தொழில் அதிபர் ஒருவரின் வீட்டிற்கும் ராகுல் காந்தி செல்லவுள்ளார்.
பீகாரில் இன்று (புதன்கிழமை) எதிர்க்கட்சிகள் அழைப்பின் பேரில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், புதிய தொழிலாளர் விதிமுறைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலைமை ஆகியவற்றை கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
ராஷ்ட்ரிய ஜனதாதளத் தலைவர் மற்றும் பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா மற்றும் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இதை உறுதிப்படுத்தினர்.
போராட்டத்தில் பங்கேற்பதுடன், சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தொழில் அதிபர் ஒருவரின் வீட்டிற்கும் ராகுல் காந்தி செல்லவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Next Story






