search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர சதி நடக்கிறது- ராகுல் காந்தி
    X

    இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர சதி நடக்கிறது- ராகுல் காந்தி

    • உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வேலையைப் பறிக்க நினைக்கின்றன.
    • காங்கிரஸ் இதை ஒருபோதும் அனுமதிக்காது- சமூக நீதிக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

    உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் அவற்றைப் பொதுப் பிரிவினருக்கான இடங்களாக மாற்றி மற்ற பிரிவினரைக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம்" என்று பல்கலைக்கழக மானியக்குழு புதிய வழிகாட்டு விதிகளை உருவாக்கியுள்ளது.

    இதுதொடர்பாக குறிப்பிட்ட காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, "இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர சதி நடக்கிறது" என்றார்.

    ராகுல் காந்தி மேலும் கூறியதாவது:-

    யுஜிசியின் புதிய வரைவில், உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்சி, ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர சதி நடக்கிறது.

    இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசிய பாஜக- ஆர்எஸ்எஸ், இப்போது இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வேலையைப் பறிக்க நினைக்கின்றன.

    சமூக நீதிக்காகப் போராடும் மாவீரர்களின் கனவுகளைக் கொல்லவும், தாழ்த்தப்பட்ட பிரிவினரின் பங்களிப்பை இல்லாதொழிப்பதற்கும் இது ஒரு முயற்சி. இதுதான் 'அடையாள அரசியலுக்கும்' 'உண்மையான நீதி'க்கும் உள்ள வித்தியாசம், இதுதான் பாஜகவின் குணாதிசயம்.

    காங்கிரஸ் இதை ஒருபோதும் அனுமதிக்காது- சமூக நீதிக்காக நாங்கள்

    தொடர்ந்து போராடுவோம். மேலும் இந்த காலியிடங்களை இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்களைக் கொண்டு மட்டுமே நிரப்பவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×