என் மலர்
இந்தியா

போதை பொருள்கள் வழக்கில் பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது
- எம்.எல்.ஏ. வீட்டில் ஜலாலாபாத் போலீசார் சோதனை நடத்தினர்.
- சுக்பால்சிங் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. சுக்பால்சிங் கைரா. இவர் மீது கடந்த 2015-ம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இவ்வழக்கு தொடர்பாக ஒரு சிறப்பு புலனாய்வு குழு கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இன்று அதிகாலை சுக்பால்சிங் எம்.எல்.ஏ. வீட்டில் ஜலாலாபாத் போலீசார் சோதனை நடத்தினர்.
பின்னர் சுக்பால் சிங் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுக்பால்சிங், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் சோதனை செய்தபோது, அதை பேஸ்-புக் பக்கத்தில் சுக்பால்சிங் குடும்ப உறுப்பினர் ஒருவர் நேரடியாக ஒளிபரப்பினார். சுக்பால்சிங் எம்.எல்.ஏ. கைதுக்கு காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Next Story






