என் மலர்
இந்தியா

அற்புதமான கேப்டன்ஷிப்- ரோகித் சர்மாவை போனில் வாழ்த்திய பிரதமர் மோடி

- இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடிய வீராட்கோலியை பாராட்டினார்.
- இந்திய அணி உலக கோப்பையை வென்றதுடன் கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களையும் வென்றது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணியுடன் பிரதமர் மோடி போனில் பேசி வாழ்த்து, பாராட்டுகளை தெரிவித்தார். ரோகித் சர்மாவின் அற்புதமான கேப்டன் ஷிப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடிய வீராட்கோலியை பாராட்டினார். தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டுக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பங்களிப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவில், "இந்திய அணி உலக கோப்பையை வென்றதுடன் கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களையும் வென்றது. அவர்கள் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாதது சிறிய சாதனை அல்ல" என்றார்.
PM Modi speaks to Team India after T20 World Cup win, congratulates Rohit Sharma for splendid captaincyRead @ANI Story | https://t.co/tLid0aHEw6 #PMModi #TeamIndia #T20WorldCupFinal #IndiaWinWorldCup pic.twitter.com/5fOuR3nTSr
— ANI Digital (@ani_digital) June 30, 2024