என் மலர்
இந்தியா

பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் 98-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
- அத்வானி ஜியின் வாழ்க்கை இந்தியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- அத்வானி எப்போதும் தன்னலமற்ற கடமை உணர்வையும், உறுதியான கொள்கைகளையும் கொண்டுள்ளார்.
பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
எல்.கே.அத்வானி ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உயர்ந்த தொலைநோக்குப் பார்வையும் அறிவுத்திறனும் கொண்ட ஒரு அரசியல்வாதியான அத்வானி ஜியின் வாழ்க்கை இந்தியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
அவர் எப்போதும் தன்னலமற்ற கடமை உணர்வையும், உறுதியான கொள்கைகளையும் கொண்டுள்ளார். அவரது பங்களிப்புகள் இந்தியாவின் ஜனநாயக மற்றும் கலாசார நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளன. அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
Next Story






