என் மலர்
இந்தியா

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
- மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- ராகுல் காந்தி நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனையொட்டி அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






