என் மலர்
இந்தியா

பிரதமர் மோடி
கொரோனாவில் இருந்து ஜப்பான் பிரதமர் விரைவில் குணமடைய வேண்டும் - பிரதமர் மோடி வாழ்த்து
- ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, புமியோ கிஷிடா தனிமைப்படுத்தப்பட்டு தற்போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் என பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ ஷிகிடா கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம்பெற்று ஆரோக்கியமாக மீண்டுவர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Next Story






