search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    லைவ் அப்டேட்ஸ்- வயநாட்டு முகாமில் உள்ளவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

    • வயநாடு நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
    • வயநாட்டில் மீட்புப் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.

    கேரள மாநிலம் வயநாடு, சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் மாயமாகிவிட்டனர். மீட்புப் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ் கோபி உள்பட பலர் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

    இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா சென்றடைந்தார்.

    Live Updates

    • 10 Aug 2024 12:48 PM IST

      வயநாட்டில் ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    • 10 Aug 2024 12:45 PM IST

      நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு.

    • 10 Aug 2024 12:22 PM IST

      வயநாடு வந்து இறங்கிய பிரதமர் மோடி சாலை மார்க்கமாக காரில் சென்று நிலச்சரிவு சேதங்களை பார்வையிடுகிறார்.

    • 10 Aug 2024 12:21 PM IST

      விமானம் மூலமாக கண்ணூர் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வயநாடு சென்றடைந்தார்.

    • 10 Aug 2024 12:19 PM IST

      நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட வயநாடு சென்றார் பிரதமர் மோடி.

    • 10 Aug 2024 11:56 AM IST

      பிரதமர் மோடியுடன் கவர்னரும், கேரள முதலமைச்சரும் ஹெலிகாப்டரில் பயணிக்கின்றனர்.

    • 10 Aug 2024 11:53 AM IST

      கண்ணூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

    • 10 Aug 2024 11:52 AM IST

      கண்ணூர் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு கேரள கவர்னர், முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்பு அளித்தனர்.

    Next Story
    ×