என் மலர்
இந்தியா
ஆபரேஷன் சிந்தூர் : ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி.. விமானப்படை வீரர்களுடன் உரையாடல்
- விமான படை வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்
- ஆதம்பூருக்கு சென்று நமது துணிச்சலான விமானப்படை வீரர்களை சந்தித்தேன்
இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தில், நமது ராணுவ வீரர்கள் பணியாற்றிய விதம் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. போர் பதற்றம் ஓய்ந்ததை தொடர்ந்து இன்று ஜலந்தரில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.
அங்கு விமான படை வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "ஆதம்பூருக்கு சென்று நமது துணிச்சலான விமானப்படை வீரர்களை சந்தித்தேன். தைரியம், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் உருவமாக இருப்பவர்களுடன் இருப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. நமது ஆயுதப்படைகள், நமது தேசத்திற்காகச் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது செயல்பட்ட விமானப்படை தளங்களில் ஒன்று ஆதம்பூர் விமானப்படை தளம் என்பது குறிப்பிடத்தக்கது.








