என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்றத்தில் அதானி பற்றிய விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி எதுவும் செய்வார்: ராகுல் காந்தி
    X

    பாராளுமன்றத்தில் அதானி பற்றிய விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி எதுவும் செய்வார்: ராகுல் காந்தி

    • உண்மை வெளிவர வேண்டும்.
    • கோடிக்கணக்கான ருபாய் ஊழல் வெளிவர வேண்டும்.

    புதுடெல்லி :

    அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி புகார் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

    அந்த அமளி காரணமாக பாராளுமன்றம் முடங்கி வருகிறது.

    இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நான் பல ஆண்டுகளாக மத்திய அரசு பற்றியும், தொழில் அதிபர்களுடனான அதன் நெருக்கம் பற்றியும் பேசி வருகிறேன். அதானி விவகாரம் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

    ஆனால், மத்திய அரசு விவாதம் நடத்த விரும்பவில்லை. அதைக்கண்டு பயப்படுகிறது.

    பிரதமர் மோடி அந்த விவாதம் நடப்பதை தவிர்க்க தன்னால் இயன்றதை எல்லாம் செய்வார். அதற்கு காரணம் இருக்கிறது. அது உங்களுக்கே தெரியும்.

    ஆனால் உண்மை வெளிவர வேண்டும். கோடிக்கணக்கான ருபாய் ஊழல் வெளிவர வேண்டும். அதானிக்கு பின்னால் உள்ள சக்தி யார் என்பதை நாடு தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×