என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

பிரதமர் மோடி
ஏக்நாத் ஷிண்டே, பட்னாவிசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

- மகாராஷ்டிர முதல் மந்திரியாக பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டேவுக்கு உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்தார்.
- துணை முதல் மந்திரியாக பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார்.
புதுடெல்லி:
மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே நேற்று பதவியேற்றார். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜ.க. ஆதரவுடன் பதவியேற்றார் ஷிண்டே. ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
துணை முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டேவுக்கு வாழ்த்துகள். தேர்ந்த அரசியல் அனுபவம் கொண்ட அவர், மாநிலத்தைப் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.