என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் 2 நாட்கள் பிரதமர் மோடி பிரசாரம்
    X

    கேரளாவில் 2 நாட்கள் பிரதமர் மோடி பிரசாரம்

    • கேரளாவில் 12 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி அறிவித்துவிட்டது.
    • பிரதமர் மோடி 2 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால், கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்றத்துக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் பிரதான கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தொடங்கி விட்டன.

    கேரளாவில் 12 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி அறிவித்துவிட்டது. மீதமுள்ள வேட்பாளர்கள் விவரம் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளது. இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்துக்காக கேரளா வருகிறார்.

    அவர் வருகிற 15 மற்றும் 17 தேதிகளில் கேரளாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் 15-ந்தேதியன்று பாலக்காடு மற்றும் ஆலத்தூர் தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். அவர் அங்கு நடக்கும் ரோடு-ஷோவில் பங்கேற்று மக்களை நேரடியாக சந்தித்து பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    17-ந்தேதியன்று பத்தினம்திட்டாவில் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மோடி 2 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால், கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

    பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் முதல் அடுத்தடுத்து கேரளாவுக்கு வந்து சென்றபடி இருக்கும் நிலையில், தற்போது தேர்தல் பிரசாரத்துக்காக மீண்டும் வர இருப்பது கேரள மாநில பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×