search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூர் விவகாரம்: பாராளுமன்ற விவாதத்தை தவிர்ப்பது யார்?- தலைவர்கள் பரஸ்பர குற்றச்சாட்டு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மணிப்பூர் விவகாரம்: பாராளுமன்ற விவாதத்தை தவிர்ப்பது யார்?- தலைவர்கள் பரஸ்பர குற்றச்சாட்டு

    • மத்திய அரசு சார்பில் நாங்கள் விவாதத்திற்கு தயார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
    • எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசவேண்டும் என வலியுறுத்துகிறது

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறை பற்றி எரிகிறது. இதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் சம்பவம் குறித்து மவுனம் காத்து வந்தார். நேற்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய தினம், மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி அழைத்துச் செல்லும் வீடியோ வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதேவேளையில் நாங்கள் தயாராக இருக்கிறோம். எதிர்க்கட்சிகள் அவையை நடத்தவிடாமல் தடுக்கின்றனர் என குற்றம்சாட்டுகின்றனர்.

    எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தால் பாராளுமன்றம் 2-வது நாளாக முடங்கியுள்ளது.

    இந்த நிலையில் மத்திய அரசு சொல்வது என்ன?. எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன? என்பதை பார்ப்போம்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

    நான் மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். ஆனால், எனக்கு வாய்ப்பு வழங்கப்படவிலலை. இந்த விவகாரம் குறித்து அரசு விவாதம் நடத்த வேண்டும். பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேச வேண்டும். பாராளுமன்றத்திற்கு வெளியே பிரதமர் மோடி பேசுகிறார். அவர் பாராளுமன்றத்தில் பேச வேண்டும்.

    உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத்

    இது மிகவும் முக்கியமான விசயம். மணிப்பூர் வன்முறை பற்றி சர்வதேச அமைப்பில் பேச வேண்டும். நமது பாராளுமன்றத்தில் இல்லை. ஏன் நீங்கள் (மத்திய அரசு) மணிப்பூர் சட்டம்-ஒழுங்கை பற்றி பேசவில்லை. நிர்பயா விவகாரத்தில், பா.ஜனதா எதிர்க்கட்சியாக இருந்த போது அரசை ஒரு உலுக்கு உலுக்கியது. ஆனால் தற்போது இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

    ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா

    மணிப்பூர் வன்முறை நமது ஒட்டுமொத்த மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. மத்திய அரசு தூக்கத்தில் இருந்து எழுந்து, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். மணிப்பூரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய ஒட்டு மொத்த மக்களும் விரும்புகிறார்கள். மணிப்பூர் அரசை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என விரும்புகிறோம்.

    காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி

    இந்த நேரத்தில் இதை வேறு எந்த மாநிலத்துடனும் ஒப்பிடுவதைவிட துரதிர்ஷ்டவசமானது வேறு எதுவும் இருக்க முடியாது. அதுவும் கடந்த 77-478 நாட்களாக மணிப்பூரில் அராஜக சூழ்நிலை நிலவுகிறது. அரசு மற்றும் நிர்வாகம் அங்கு சீர்குலைந்துள்ளது என்பதை சொல்வது தவறாக இருக்க முடியாது. மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி, பாராளுமன்றத்தில் பேசுவது அவரது வேலை இல்லையா?. அதனால் இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் வழங்கியுள்ளோம்.

    எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி

    சபாநாயகர் எப்போது உத்தரவு பிறப்பித்தாலும், விவாதிக்க தயாராக இருக்கிறோம். சபாநாயகர் மற்றும் மாநிலங்களை தலைவரிடம் நாங்கள் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என அமித் ஷா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் புதிய கோரிக்கைகளை வைப்பது, விவாதங்களை தடுப்பது தவறு

    பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்

    மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்துவது பற்றி எதிர்க்கட்சிகள் முக்கியமானதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. அரசு மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க விரும்புகிறது. இந்த விவகாரத்தால் நாடே வெட்டுகப்படுகிறது. தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்றால், அவர்கள் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

    மத்திய மந்திரி அனுராக் தாகூர்

    விவாதங்களைத் தவிர்க்கவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கவும் எதிர்க்கட்சிகள் சில அல்லது வேறு சாக்கு போக்குகளை கூறுகின்றன. பாராளுமன்றத்தில் இருந்து சிலர் வெளியேறுகின்றனர். பாராளுமன்றம் நடப்பதை அவர்கள் விரும்பவில்லை. பாராளுமன்ற விவாதத்தில் இருந்து அவர்கள் ஏன் ஓட வேண்டும்?. அவர்களுடைய அரசியல்வாதிகள் நீண்ட நாட்கள் பாராளுமன்றத்தில் சேவை ஆற்ற முடியாது என்பதாலா? அல்லது அவர்களுடைய அரசின் ஓட்டைகள் வெளிப்படும் என்பதாலா?.

    பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா

    காங்கிரஸ் கட்சி ஜனநாயத்தில் பாராளுமன்றம் அல்லது சட்டசபையில் விவாதம் நடத்த விரும்பாது. காங்கிரஸ் அதிகாரத்திற்கும் வரும்போதெல்லாம், ஜனநாயகத்தை நசுக்க முயற்சிக்கும். கர்நாடகாவில் 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×