என் மலர்
இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட மெகபூபா முஃப்தி
- பஹல்காம் தாக்குதல் நம் மீதான தாக்குதல். இதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்.
- உள்துறை அமைச்சர் இங்கே இருக்கிறார், தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்து, விரைவில் தண்டனை வழங்க வேண்டும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநில பாகிஸ்தான் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி தலைமையில் கண்டன பேரணி நடைபெற்றது. அப்போது, இது நம் அனைவர் மீதான தாக்குதல், அப்பாவிகளை கொலை செய்வது பயங்கரவாத செயல், அப்பாவிகளை கொலை செய்வதை நிறுத்தவும் போன்ற பதாதைகளை ஏந்தி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
கண்டன பேரணியின்போது மெகபூபா முஃப்தி கூறியதவாது:-
பஹல்காம் தாக்குதல் நம் மீதான தாக்குதல். இதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. உள்துறை அமைச்சர் இங்கே இருக்கிறார், தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்து, விரைவில் தண்டனை வழங்க வேண்டும்.
நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் வெட்கப்படுகிறோம். காஷ்மீரிகள் வெட்கப்படுகிறார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அரசாங்கம் குற்றவாளிகளைப் பிடித்து, அவர்களுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.






