என் மலர்
இந்தியா

குடும்ப ஆண்டு: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு
- 130-வது மன் கி பாத் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.
- மலேசியாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் மெச்சத்தக்க பணிகள் மேற்கொள்கின்றனர்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம் மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி வழியே நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 130-வது மன் கி பாத் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
மலேசியாவில் இந்திய மொழிகள் மற்றும் கலாசாரம் பாதுகாக்கப்படுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இந்திய சமூகத்தினரை பாராட்டினார்.
குஜராத் மாநிலம் சந்தாங்கி கிராமத்தில் உள்ள பாரம்பரியம் மிகவும் தனித்துவமானது. அங்கு வசிப்பவர்கள், குறிப்பாக முதியோர் தங்கள் வீடுகளில் சமைப்பது இல்லை. அதற்கு காரணம், அந்த கிராமத்தில் பிரமாண்ட சமுதாய சமையல் கூடம் செயல்படுவதுதான்.
இந்த முன்முயற்சி, மக்களை இணைப்பது மட்டுமின்றி, குடும்ப உணர்வை வளர்க்கிறது. இந்தியாவின் குடும்ப முறை, அந்த பாரம்பரியத்தின் ஓர் அங்கம் ஆகும்.
பல நாடுகளில் இந்தக் குடும்ப முறை மதிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன், என் சகோதரர், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயது அல் நஹ்யான் இந்தியா வந்தார். அப்போது, 2026-ம் ஆண்டை குடும்ப ஆண்டாக அமீரகம் கொண்டாடி வருகிறது. அதன் நோக்கம், மக்களிடையே இணக்கத்தையும், சமுதாய உணர்வையும் வலுப்படுத்துவது ஆகும். இது உண்மையிலேயே பாராட்டத்தக்க முயற்சி என தெரிவித்தார்.






