என் மலர்
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் - பாகிஸ்தான் எல்லை மாநில முதலமைச்சர்களுடன் அமித்ஷா ஆலோசனை
- பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
- லடாக், ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதி பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இரவு முழுவதும் துல்லியமாக தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் 9 நிலைகளை அழித்துள்ளது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத், முரிட்கே, பகல்வப்பூர் உள்ளிட்ட 9 இடங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி, முப்படையினருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிலையில் எல்லையை ஒட்டிய 10 மாநில முதலமைச்சர்கள், டி.ஜி.பி.க்கள் மற்றும் தலைமை செயலாளர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், சிக்கிம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களும், லடாக், ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர்களும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.






