என் மலர்
இந்தியா

கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்து- ஒருவர் பலி
- ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி.
- ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிக்கலாம் என தகவல்.
கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொச்சியில் உள்ள கடற்படை தலைமையகத்தின் ஓடுதளத்தில் ஐஎன்எஸ் கருடா ஹெலிகாப்டர் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
அப்போது, அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது. ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Next Story






