என் மலர்
இந்தியா

எதிரெதிர் கூட்டம்: ஒரே விமானத்தில் நிதிஷ்குமார் - தேஜஸ்வி
- பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
- கொடுங்கோன்மைக்கு எதிராக வாக்களிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதேநேரம் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிகிறது.
எதிர்க்கட்சிகளின் வரிசையில் இருந்த இந்த இரு கட்சிகளும் சமீபத்தில்தான் பா.ஜனதாவுடன் இணைந்திருந்தன. எனவே அந்த கட்சிகளை இந்தியா கூட்டணிக்கு வர அழைப்பு விடுக்க வாய்ப்பு உள்ளது.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிதிஷ்குமார், கூட்டணியை முறித்துக்கொண்டு மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நிதிஷ்குமாரும், இந்தியா கூட்டணியின் தேஜஸ்வியும் பயணம் செய்தனர்.
பரபரப்பான அரசியல் சூழலில் நிதிஷ்குமாரும் தேஜஸ்வி யாதவும் ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து பயணம் செய்தனர்.
தொங்கு பாராளுமன்றம் அமைந்ததால் பாஜக ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் ஆதரவு தேவைப்படும் நிலையில் ஒரே விமானத்தில் தேஜஸ்வியுடன் பயணம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிதிஷ் உடன் ஒரே விமானத்தில் பயணித்த தேஜஸ்வி யாதவ், "நாங்கள் வாழ்த்துகளை பரிமாறிக்கிட்டோம். வேறென்ன.. பொறுமையாக காத்திருங்கள்.
கொடுங்கோன்மைக்கு எதிராக வாக்களிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. இன்று மாலை கூட்டத்திற்குப் பிறகு என்ன முடிவு எடுக்கப்படும் என்று பார்ப்போம் என தெரிவித்தார்.






