என் மலர்
இந்தியா

மாநிலங்களவை எம்பி ஆகிறார் நிதின் நபின்... 6 மாநிலங்களின் வேட்பாளர்களை உறுதி செய்தது பாஜக!
- பீகாரில் உள்ள ஐந்து இடங்களுக்கான அறிவிப்பு பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
- 10 மாநிலங்களில் உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.
பீகாரில் ராஜ்யசபா தேர்தல் தொடர்பான சஸ்பென்ஸை பாஜக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. 2026 ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களாக பாஜக அதன் தலைவர் நிதின் நபின் மற்றும் ஷிவேஷ் குமார் ராம் ஆகியோரை நியமித்துள்ளது. பாஜகவின் தேசிய செயல்தலைவராக சமீபத்தில் நிதின் நபீன் தற்போது பாட்னாவின் பங்கிபூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
மார்ச் 16 அன்று நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலுக்காக பா.ஜ.க வெளியிட்டுள்ள 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் நிதின் நபினின் பெயர் இடம் பெற்றுள்ளது. அசாமில், தேராஷ் கோவாலா மற்றும் ஜோகன் மோகன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில், பாஜக தனது மாநிலங்களவை வேட்பாளராக லட்சுமி வர்மாவை அறிவித்துள்ளது. தமிழ்நாடு, பீகார் உட்பட 10 மாநிலங்களில் உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.
பீகாரில் உள்ள ஐந்து இடங்களுக்கான அறிவிப்பு பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 5 ஆகும். என்டிஏ கூட்டணி 200க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை கொண்டுள்ளதால், ஐந்து இடங்களில் 4 இடங்களில் வெல்வது உறுதி. இதில் ஜேடியுக்கு 2, பாஜகவிற்கு இரண்டு. ஐந்தாவது இடத்திற்கான போட்டிதான் தற்போது தீவிரமாக உள்ளது.






